மின்சார துண்டிப்பு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

மின்சாரம் தடை செய்யப்படும் என்றால் அது தொடர்பான நேரத்தை மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தத் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்விநியோகம் தடை செய்யப்படும் நேரம் அறிவிக்கப்படும் என என ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் மக்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு சென்று வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவர் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.