கண்டி, மடவளை, வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வங்குவக்கடே பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்றையதினம் (07) வீடொன்றின் பின் சுவர் அமைப்பதற்காக அத்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நால்வர் இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலத்தடியில் புதையுண்டிருந்த நால்வரையும் பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குறித்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்திருந்த மடுல்கலே, பூஜாபிட்டிய, கெட்டபுல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வத்தேகம பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment