நாடு முழுவதும் `ஒரு இலட்சம் அபிவிருத்தித் திட்டங்கள்' ஆரம்பம்

‘வரவு செலவுத் திட்டத்தில் ஒரு இலட்சம் வேலைத்திட்டம்' எனும் தொனிப்பொருளிலான பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று நாடு முழுவதும் சுபநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சகல பிரஜைகளினதும் வாழ்வாதாரத்தை பலப்படுத்தி நாட்டை சுபீட்சமாக மாற்றும் இந்தத் திட்டத்துக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ ரூ.100 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய கிராமத்துக்கான வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,00,000 அபிவிருத்தித் திட்டங்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் இன்று காலை 8.52 க்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளுக்கிணங்க, அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை, மக்களின் தேவைக்கேற்ப பயன்படுத்த அரசு உத்தேசித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறைந்த பட்சம் ஒரு கிராம சேவையாளர் பிரிவில் ஐந்து அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் "ஒரு இலட்சம் அபிவிருத்தித் திட்டம்" ஆரம்பிக்கப்படுகிறது.இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் விதம் தொடர்பாக நாடு முழுவதும் தேர்தல் தொகுதி மற்றும் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் தொடர் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

இதன்படி, மக்கள் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை விரும்புகிறார்கள், அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கிராம மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அந்தத் திட்டங்கள் அனைத்தும் இன்று (03) அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் சுப வேளையில் அந்தந்த தொகுதிகளில் ஆரம்பிக்கப்படுகின்றன.

நாடு முழுவதுமுள்ள 336 பிரதேச செயலக பிரிவுகளும் உள்ளடங்களும் வகையில் 14,021 கிராம சேவகர் பிரிவுகளிலும் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுவது முக்கிய அம்சமாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் அவர்கள் முன்வைத்த கொள்கைகளை கிராம மட்டத்தில் முன்னெடுக்கும் வகையில் கிராமத்துக்கான ஒரு இலட்சம் வேலைத் திட்டத்தை செயற்படுத்த முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றையடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் மனைப்பொருளாதாரத்தை பலப்படுத்தி தங்களுக்குத் தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்து நாட்டுக்கு பங்களிக்கும் வகையிலும் இந்த பாரிய அபிவிருத்தித் திட்டம் நாடு முழுவதும் இன்று ஆரம்பிக்கப்படுகிறது.

வாழ்வாதார அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு, புதிய வருமான வழிகள், கிராமிய உட்கட்டமைப்பு வசதி, அபிவிருத்தி, வர்த்தகம், வீட்டுத் திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கிராமிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதோடு உற்பத்திப் பொருளாதாரத்தை பலபடுத்தும் நோக்குடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் 2022 வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.