திங்கள் முதல் மீண்டும் மின் துண்டிப்பு.

தற்போதைய சூழ்நிலையின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் பகல்வேளையில் ஏ.பி மற்றும் சி வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எவ்வாறாயினும், இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படமாட்டாது எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது .

அதேநேரம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான உலை எண்ணெய் தாங்கிய கப்பலை அடுத்த வாரம் நாட்டிற்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது .

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.