மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை! - வெளியானது தகவல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அனைத்து எரிபொருள் விலைகளையும் ஒரு வாரத்திற்குள் அதிகரிக்கும் என கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விற்பனை நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விற்பனை நிலையங்களுக்கு படையெடுப்பார்கள்.

இதனால், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் நஷ்டம் தொடர்ந்து உயரும் என்றும், அதன் விளைவாக, எரிபொருள் விலை தவிர்க்க முடியாமல் உயரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க (ஜே.எஸ்.எஸ்) செயலாளர் ஆனந்த பாலித இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

IOC நிறுவனம் இருதரப்பு புரிந்துணர்வுடன் விலையை உயர்த்தியுள்ளதாகவும், அதற்கேற்ப இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விரைவில் எரிபொருள் விலையை உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் தற்போதைக்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், அதனால் ஏற்படும் நட்டத்தை மக்களுக்கு வழங்காமல் இருக்கவே கூட்டுத்தாபனம் முயற்சிப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது எனவும், இதனை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.