எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு

நாட்டில் தற்போதுள்ள நிலைமை, எரிபொருள் இறக்குமதிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.

நாட்டில் டீசல் தட்டுப்பாடு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டாா்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இன்று (22) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டாா்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய விலை நிலவரங்களின் அடிப்படையில் எரிபொருள் இறக்குமதிக்காக மாதாந்தம் 500 மில்லியான் டொலர் நிதி செலவிடப்படுகின்றது. ஆனால், எமது மாதாந்த ஏற்றுமதி வருமானம் 10 மில்லியன் டொலராகும். அதனடிப்படையில் பார்க்கும்போது எமது வருமானத்தை விட 50 சதவீதத்துக்கும் அதிகளவான தொகை எரிபொருளுக்காக செலவிடப்படுகின்றது.

இதனால், எரிபொருள் இறக்குமதி செய்வது என்பது சவாலாக மாறியுள்ளது. உண்மையில் தற்போது எமது நாட்டில் எரிப்பொருள் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என்பவற்றுக்கு அப்பால் எமது நாட்டில் வெளிநாட்டு வருமானம் மற்றும் டொலர் ஆகிவற்றுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த பிரச்சினைகளுக்கான பிரதான காரணமாகும்.

தற்போது எரிபொருள் இறக்குமதிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை, நேற்றைய தினம் இலங்கை வங்கியினூடாக டீசலுக்கும் நிதி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பலிலிருந்து டீசலை தரையிறக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னுமொரு பெற்றோல் தாங்கிய கப்பல் எமது கடற்பரப்பில் இருக்கிறது. நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரைவைக் கூட்டத்தில் இதற்கு தேவையான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக்கொடுக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தாா். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்.

நாட்டில் டீசல் தட்டுப்பாடு இருக்கிறது என்பது உண்மை. கடந்த சில வருடங்களாக வரையறுக்கப்பட்ட டீசலே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதன் காரணமாகவே தற்போது, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த முதலாம் திகதி லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது. இந்நிலையில், எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் தொடர்ச்சியான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டது.

இறுதியாக டிசம்பா் மாதம் 20 ஆம் திகதியே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பட்டிருந்தாலும் இதுவரையில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. நேற்றைய அமைச்சரை கூட்டத்திலும் எரிபொருளை விலையை அதிகரிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினாா்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.