எரிபொருள் விலை தொடர்பில் வலுசக்தி அமைச்சு விடுத்த அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

முன்னதாக லங்கா ஐஓசி நிறுவனம் கடந்த 6 ஆம் திகதி தமது எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்த நிலையில், விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கமைய, பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 204 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

மேலும், டீசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசலின் புதிய விலை 139 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.