தென்னாப்பிரிக்காவின் புதிய கொவிட் மாறுபாடான நியோகோவ் அல்லது BA.2 வைரஸ், எதிர்வரும் நாட்களில் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பரவும் பட்சத்தில் தொற்றுக்குள்ளாகாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த வகை வைரஸ் தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாறுபாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றிருப்பது அவசியமாகும். இதனால் உடனடியாக சென்று பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்,இந்த நாட்களில் மற்றுமொரு வைரஸ் காய்ச்சல் பரவுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
விசேடமாக மேல் மாகாணம் உள்ளிட்ட அதிக சனத்தொகையைக் கொண்ட பகுதிகளில் அதிக நோயாளர்கள் பதிவாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment