மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய முறைமை காரணமாக இவ்வாறு திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்காது என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இது தொடர்பான புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, பெப்ரவரி, மார்ச், ஏப்பரல் ஆகிய எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை இருக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக எரிபொருள் தடையின்றி கிடைத்தல், மின் உற்பத்தி நிலையங்களில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத நிலையில் இதனை நடைமுறைப்படுத்த முடியும் மென அவர் தெரிவித்தார்.

நீர் மின்னுற்பத்திக்கான நீரை கட்டுப்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதா அவர் தெரிவித்தார்.

தனியாரிடமுள்ள பயன்படுத்தப்படாத மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துதல், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாயுச் சீராக்கிகளை பயன்படுத்துவதை குறைத்தல் போன்ற விடயங்களை மேற்கொள்வதன் மூலம் இதனை மேலும் உரிய வகையில் நடைமுறைப்படுத்தலாமென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மின்வெட்டை அமுல்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் அது தொடர்பில் இன்று (15) பிற்பகல் அறிவிக்கப்படுமென, ஜனக ரத்நாயக்க இன்று முற்பகல் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், போதிய எரிபொருள் இன்மை காரணமாக, களனிதிஸ்ஸ சொஜிட்ஸ் (Sojitz) அனல்மின் நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.