நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் COVID தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
COVID நோயாளர்களை அடையாளம் காண்பதற்கும் தற்போதைய நிலைமையின் கீழ் செயற்படுவதற்கும் தேவையான சுகாதார ஆலோசனைகளை சுகாதார அமைச்சிடம் பெற்றுக்கொள்ளவதற்கு எண்ணியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
COVID தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
சிகிச்சை நிலையங்களில் உள்ள 5,758 கட்டில்களும் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில் உள்ள 62 கட்டில்களும் தற்போது பயன்படுத்தப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
Post a Comment