வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

நாட்டிற்குள் அந்நிய செலாவணி வழமைக்குத் திரும்பியவுடன், மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மற்றும் டயில் (tiles) தவிர்ந்த ஏனைய அனைத்து அத்தியாவசியமற்ற பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக பெருமளவிலான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியில் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.