உலகம் முழுவதும் ஒமிக்ரோன் பிறழ்வு மிக வேகமாக பரவி வருகின்றமையினால், எதிர்வரும் ஓரிரு வாரங்கள் இலங்கைக்கு சவால் மிக்கது என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் ஒட்சிசன் தேவைப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மற்றும் இரண்டாவது மருந்தளவுகளை செலுத்திக்கொண்டு, சிலருக்கு 5 அல்லது 6 மாதங்கள் கடந்துள்ளமையினால், அந்த தடுப்பூசியின் செயற்பாடு தற்போது வலுவிழந்துள்ளதாகவும் அதனால், இயலுமான வரை விரைவாக சென்று, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இந்நாட்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக தெரிவித்த உபுல் ரோஹண, பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவார்களாயின் எதிர்வரும் இரண்டு வாரங்களில் சுகாதார பிரிவினர் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment