க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் , தமது அனுமதிப் பத்திரங்களை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக தமது அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுமதி அட்டையின் பெயர், பாடம் மற்றும் மொழி ஆகியவற்றை திருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தர 2021 பரீட்சை 2022 பெப்ரவரி 07 முதல் மார்ச் 05 வரை நாடளாவிய ரீதியில் 2,439 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.