மின்வெட்டு தொடர்பிலான மற்றுமொரு அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தும் நேரம் தொடர்பிலான அறிவிப்பை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (19) மாலை 6 மணி முதல் 7:45 வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் சில பகுதிகளுக்கு இன்றிரவு 7:45 முதல் 9:30 வரை மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை கூறுகின்றது.

செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகள் இதுவரை வழமைக்கு திரும்பாத நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.