தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை மீண்டும் ஒப்படைக்க விரும்பும் நுகர்வோருக்கு, அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மீள பெற்றுக்கொள்ளப்படும் எரிவாயு சிலிண்டர்களில் எஞ்சியுள்ள எரிவாயுவின் அளவு, எரிவாயுவின் தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப அளவிட்டு, அதன் விலைக்கேற்ப புதிய எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்யும்போது குறைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நுகர்வொர் விவகார அதிகாரசபை ஆலோசனை வழங்கியுள்ளது.
அதற்கமைய, எரிவாயு பகிர்ந்தளித்தல் அல்லது, தமது முகவர்களினூடாக எரிவாயு சிலிண்டர்களை மீள பொறுப்பேற்பதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அதுதொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பாவனையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய 1977 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் எனவும் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள எரிவாயு முகவர் நிலையங்களுக்கு தொர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment