ஜனாதிபதியின் விசேட உறுதிமொழி..!

ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றித் தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

மீரிகமை முதல் குருணாகலை வரையிலான அதிவேக வீதியை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விவசாயக் குடும்பத்திலிருந்து தோன்றிய தலைவர் என்ற வகையில், விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு தாம் எப்போதும் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படாத நிலங்களில் விவசாயம் செய்த இளைஞர்களை மறக்கப் போவதில்லை எனவும், மீண்டும் அவ்வாறு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊடகங்களுடன் தமக்குப் போட்டி கிடையாது எனவும், நாட்டை கட்டியெழுப்பவே தாம் ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டு மக்களின் நலனுக்காக அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.