கடந்த காலத்தை விட கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தை விட தற்போது ஒட்சிசன் வழங்க வேண்டியுள்ள கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும், ஆனால் இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடனும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் முக்கியம்´ என சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறினார்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் தேவையான சட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக இலங்கையில் ஐந்தாவது கொவிட் அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

நீண்ட வார இறுதி பேரணிகள் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் தினமும் பதிவாகும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.