நாட்டில் தற்போது கொரோனா சுனாமி அலை - வைத்தியர் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு.

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா தொற்றாளர்களில் 95 வீதமானோர் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரசாயன ஆய்வுகூட பரிசோதனைகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் தற்போது கொரோனா சுனாமி அலையொன்று உருவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டில் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அனைவரும் கொரோனா தொற்றினால் மாத்திரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றுடன் மேலும் பல நோய் நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளவர்களே இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த தொற்றாளர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு நோய் அறிகுறிகள் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டாலும் புதிய சாதாரண நிலைமையின் கீழேயே பொதுமக்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.