சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது ஒரு கிலோமீட்டருக்கு அரசாங்கம் 103.56 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (26) காலை துவிச்சக்கரவண்டி பாவனையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோமீற்றருக்கு 236.48 ரூபாவை மிச்சப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்திற்கு 339.98 ரூபா இலாபம் கிடைக்கின்றது எனவும் தெரிவித்தார்.

துவிச்சக்கரவண்டி பாவனையினால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைத்தல், நேர விரயங்களைத் தடுப்பது மற்றும் தொற்றாத பல நோய்களைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றின் மூலம் சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கமைவாக, சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற வகையில், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக சைக்கிள் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.