புலமைப்பரிசில் வினாத்தாள் முன்பாகவே வௌியானதா? பரீட்சைகள் திணைக்களத்தின் பதில்.

2021, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாப்பத்திரங்கள், பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வௌியானதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாணவர்களிடம் வினாத்தாள்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர், சில வினாத்தாள்கள் நிழற்படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கூறியுள்ளார்.

இதனால் பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (22) நடைபெற்ற 2021, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 340,508 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இதனிடையே, பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.