ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வானது, எதிர்வரும் இரு வாரங்களில் நாட்டின் பிரதான வைரஸ் பிறழ்வாக மாற்றமடையும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுக்கின்றது.
சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் தொடர்பிலான பிரிவின் இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைத் தருவோருக்கு நடத்தப்படும் பரிசோதனைகளில், அவர்கள் கொவிட் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்படும் பட்சத்தில், அவர்களின் மாதிரிகளின் ஊடாக மூலக்கூறு பரிசோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பிறழ்வை அடையாளம் கண்டுக்கொள்ளும் நோக்கிலேயே மூலக்கூறு பரிசோதனை நடத்தப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்
டெல்டா பிறழ்வை விடவும், ஒமிக்ரோன் பிறழ்வானது, மூன்று மடங்கு வேகத்தில் பரவக்கூடிய வல்லமை கொண்டமை, பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வு தொற்றில் 48 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார்.
Post a Comment