மகாவலி கங்கையைப் பயன்படுத்துபவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு என நீர்ப்பாசன திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து வெளியேறும் நீரானது மகாவலி கங்கையுடன் இணைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ரீ. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இதனால் மகாவலி கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.
இதுதவிர, கலாஓயா, மட்டக்களப்பு முந்தனையாறு ஆகியவற்றின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ரீ. அபேசிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வாகனேறியில் 158.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி சுப்ரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பில் 120.4 மில்லிமீற்றரும், மயிலம்பாவெளியில் 103.4 மில்லிமீற்றர் அளவிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment