சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா! பெற்றோர் ஆசிரியர்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள்!

கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதே நிலைமை ஏனைய வைத்தியசாலைகளிலும் காணப்படுகிறதா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் பாடசாலைகள் அனைத்தும் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , மாணவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே மாணவர்கள் மத்தியிலும் , மாணவர்கள் ஊடாகவும் கொவிட் பரவல் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் கனிசமானளவு அதிகரிக்கக் கூடும்.

எனவே தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை பெரும்பாலான மக்கள் தற்போது ஒன்றுக்கூடலின்போது முகக்கவசங்களை அணிவதில்லை. குறிப்பாக திருமணங்கள் உட்பட்ட நிகழ்வுகளில் இது தவிர்க்கப்படுகிறது.

இந்தநிலையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர், 3வது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் இதன் மூலம் தமது பிள்ளைகளை பாதுகாக்கமுடியும் என்று சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.