அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி!

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

தற்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, ஊடகங்களை கையாள்வதில் சற்று பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையிலும், அண்மையில் அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் சமூகத்தில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான நிலையிலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் மாற்றம் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிந்தது.

பொலிஸ் பேச்சாளர் பதவியை தற்போது குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதானியாக பணியாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு மேலதிக பதவியாக கையளிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் பதவியில் ஐந்துமுறை கடமையாற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரி எனும் ரீதியில் இந்த அவதானம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவின் வேலைப் பளுவுக்கு மத்தியில் அவரிடம் மற்றொரு சுமையை சுமத்துவதைவிட, அஜித் ரோஹணவின் நேரடி கட்டுப்பாட்டில் புதியதொரு பொலிஸ் பேச்சாளரை அறிமுகம் செய்வது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகத்தின் அவதானம் செலுத்தப்பட்டது.

இந் நிலையிலேயே அஜித் ரோஹண சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் தற்போது வரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவே உள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.