கொழும்பு மாவட்ட ஶ்ரீ.ல.பொ.பெ. பாராளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக, பாராளுமன்றம் மற்றும் பல்வேறு கூட்டங்களில் அவர் அரசாங்கத்தை விமர்சனம் செய்து வந்திருந்த நிலையில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தன்மை பதவி விலக்கியமையானது, தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு அது ஆசீர்வாதம் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment