போர்ட் சிட்டியில் புகைப்படம் எடுக்க கட்டணம் அறவிடுவது தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு.

கொழும்பு துறைமுக நகரில் பொது மக்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுப்பதற்கு கட்டணங்கள் அறவிப்படும் என்ற தகவல் பொய்யானது என கொழும்பு துறைமுக நகர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை துறைமுக நகர நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும் தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தொழில் ரீதியான வர்த்தக புகைப்படங்கள் போன்றவற்றுக்கு கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது போன்ற நடவடிக்கைகளின் போது துறைமுக நகரத்திற்கு வரும் பொது மக்களின் தனிப்பட்ட நலன்கள் மீறப்படுவது குறித்து தமது நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள.

எனவே, துறைமுக நகரத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிர்மாணங்களின் போது, பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு துறைமுக நகரத்தின் நடைப்பாதை காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும.

அதேநேரம், கட்டணம் செலுத்தப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் 9 மணிக்குள் அல்லது கோரப்படும் நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காணொளி புகைப்படம் தனிப்பட்ட நிகழ்வுகள், திருமண தயாரிப்புகள், படத்தயாரிப்புகள், இசை, விளம்பரம் மற்றும் வர்த்தக நோக்கிலான தயாரிப்புள் கட்டணங்களுக்கு உட்டபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.