கொழும்பு துறைமுக நகரில் இனி இலவசமாக புகைப்படம் எடுக்க முடியாது!

கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளியினை பதிவு செய்வதற்கான கட்டணத்தினை கொழும்பு துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, தனிநபர் மற்றும் வணிக ரீதியிலான இரண்டு வகையான கட்டணங்கள் அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தனிநபர் பிரிவுக்கமைய இரண்டு முதல் ஐந்து வரையான நபர்களுக்கு 30 ஆயிரம் ரூபாவும், ஆறு முதல் 10 வரையான நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 10 இற்கும் மேற்பட்டவர்கள் காணப்படும் நிலையில், அதற்கேற்ப கட்டணம் மாற்றமடையுமெனவும் கொழும்பு துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, வணிக பிரிவுக்கமைய, 10 இற்கும் குறைந்த நபர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய குறித்த இரு பிரிவினருக்கும் ஒரே நேரத்தில் மூன்று மணிநேரம் வழங்கப்படுமெனவும் கொழும்பு துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.