அடுத்த அமைச்சரை பதவி நீக்க தயாராகும் ஜனாதிபதி? - வெளியாகியுள்ள தகவல்

உடன் அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம்ஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு கூட்டுப்பொறுப்புக்களை மீறி விமர்சனங்களை முன்னெடுத்த மற்றுமொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அண்மைய நாட்களில் அரசாங்கத்தையும் அரச தீர்மானங்களையும் கடுமையாக விமர்சித்தனர்.

அமெரிக்காவுடனான யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக கடும் போக்குடன் செயற்பட்டதுடன் நீதிமன்றத்திற்கும் சென்றனர்.

ஊடகங்களின் பிரதாணிகளை கடந்த வாரத்தில் சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த மூன்று அமைச்சர்கள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

மறுப்புறம் இவர்களால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீள பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கியுள்ளதுடன் மற்றுமொரு முக்கிய அமைச்சரவை அமைச்சரும் நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.