மின் துண்டிப்பு தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

10 ஆயிரம் மெற்றிக் டன் எரிபொருள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து கிடைப்பதன் காரணமாக மின்துண்டிப்பு இடம்பெறமாட்டாது என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் உதய கம்மன்பில, நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 மெட்றிக் டன் படி 8 நாட்களுக்குத் தேவையான எரிபொருளை இன்று விடுவிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த எரிபொருள் இன்று முதல் மின்சார உற்பத்தி பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கி நேற்று நிதி வழங்கியதன் காரணமாகக் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த எரிபொருள் அடங்கிய கப்பலிலிருந்து 37,000 மெட்றிக் டன் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

அதிலிருந்து 10,000 மெட்றிக் டன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.