டிக்டொக் செயலியால் வந்த வினை; கொழும்பில் கத்தியால் குத்தி சிறுவன் கொலை

டிக்டொக் செயலி காணொளி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 17 வயதுடைய சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தர்.

நேற்று பிற்பகல் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய ஒழுங்கை வழியாக சில நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனுடன் சென்ற மற்றுமொரு சிறுவன் கத்தியால் முதுகில் குத்தியதை அடுத்து, காயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிக்டொக் செயலியில் உருவாக்கப்பட்ட காணொளி தொடர்பான தகராறின் காரணமாக கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவன் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்டொக் செயலி 2022 இல் மூன்றாவது பெரிய சமூக வலைத் தளமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டொக் கடந்த இரண்டு வருடங்களாக, விரைவாக வளர்ச்சியடைந்து வருவதுடன், இலங்கையிலும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாகவும் உள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு செயலியாகவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.