மின் துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
இந்த கலந்துரையாடலானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
மின்சாரம், எரிசக்தி, போக்குவரத்து உள்ளிட்ட விடயங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் குறித்த சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மின்சார விநியோகம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்ததன் பின்னர், அதன் தீர்மானத்தைப் பிற்பகல் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின் துண்டிப்பினை அமுல்படுத்துவதாயின், அதற்கான காலப்பகுதி தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய கலந்துரையாடலில் கடனடிப்படையில், எரிபொருளை விநியோகிக்க எரிபொருள் கூட்டுத்தாபனம் இணங்கினால், தொடர்ச்சியாக மின்சார விநியோகம் இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Post a Comment