உத்தரா தேவி அதிவேக புகையிரதம் காருடன் மோதியது; ஒருவர் உயிரிழப்பு!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் வனவாசலை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் இன்று (01) மதியம் 12.45 மணியளவில் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.கார் தீப்பிடித்து எரிந்ததால் கார் பலத்த சேதம் அடைந்துள்ளதோடு. தீயினால் புகையிரத இயந்திரங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வனவாசல, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவத்தால் புகையிரதத்தில் பயணம் செய்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.