கண்டியில் A/C கேஸ் வெடிப்பு: இளைஞர் தீக்கிரையாகி உயிரிழப்பு!

கண்டி – இரண்டாவது ராஜசிங்க மாவத்தையிலுள்ள நட்சத்திர விடுதியில் குளிரூட்டிக்கான வாயு (A/C GAS) வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நேர்ந்துள்ளது.

ஹோட்டலிலுள்ள குளிரூட்டிக்கான வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளது.

வெடிப்பு சம்பவத்தில் தீ காயங்களுக்கு உள்ளான இளைஞன், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மாத்தளை – வரகாமுர பகுதியைச் சேர்ந்த 23 வயதான மொஹமட் ஹிஷாம் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த நபர் ஹோட்டலில் பணிப்புரியும் ஊழியர் கிடையாது என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குளிரூட்டி வாயு திருத்தப்பணிகள் வெளி நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.