இன்று (05) முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு − அனைத்து பஸ் கட்டண விபரங்களும் ஒரே பார்வையில்

பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கான கட்டண அதிகரிப்பு இன்று (05) முதல் அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அறிவிக்கப்பட்ட 17.44 வீத பஸ் கட்டண அதிகரிப்பே, இவ்வாறு இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக ஆணைக்குழு கூறுகின்றது.

இதன்படி, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண அதிகரிப்பு தொடர்பிலான விசேட அறிவிப்பு அடங்கிய ஆவணங்கள், பயணிகள், பஸ்களின் உரிமையாளர்கள், பஸ் ஊழியர்கள் என அனைத்து தரப்பிற்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.