இலங்கையர்களுக்கு நான்காவது தடுப்பூசி! வெளியான தகவல்

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆய்வுகளில் இருந்து கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் மேலதிக நட வடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேனை, மூன்றாவது தடுப்பூசியை உரிய முறையில் மக்கள் பெற்றுக் கொள்ளவில்லை.

மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றவர்களுக்குச் சிறிய கால அவகாசம் தேவைப்படுகின்றது.

அதன் பின்னர் நான்காவது தடுப்பூசி குறித்து சிந்திக்க வேண்டும். எனினும் தரவுகள் மீளாய்வு செய்த பின்னர் நான்காவது தடுப்பூசி வழங்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.