நாடு முழுவதும் மீண்டும் ஏற்படவுள்ள மின் தடை : இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாடு பூராகவும் ஏற்பட்ட மின் தடையை தொடர்ந்து நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை முழுவதுமாக வழமைக்கு கொண்டு வர 3 நாட்கள் வரை செல்லலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மின்சாரத் தேவையின் அடிப்படையில் குறுகிய கால மின் விநியோக தடை ஏற்படக்கூடும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 ஆலைகள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறான குறுகிய கால மின்வெட்டுகள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.