மீரிகமையில் ரயிலுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதால் பிரதான ரயில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
இன்று (15) அதிகாலை 5.35 மணியளவில் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபயணிகள் புகையிரத்துடன், திவுலப்பிட்டி நோக்கி சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியது.
இதன்போது சுமார் இரண்டு மணித்தியாலங்கள் புகையிரத சேவை பாதிக்கப்பட்டதோடு, இரண்டு வாகன சாரதிகளும் காயங்களுக்கு உள்ளாகினர்.
டிப்பர் வண்டி, புகையிரதப் பாதையினைக் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Post a Comment