பண்டிகை காலப் பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், சதொச விற்பனை நிலையங்களில் விசேட பொருட்கள் அடங்கிய பொதியொன்றை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, 10 கிலோகிராம் சம்பா அரிசி உள்ளடங்களான பொருட்கள் பொதியொன்றை 1,998 ரூபாவிற்கு கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
1998 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் ஊடாகவோ அல்லது 011-5 201998 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ் அப் செய்வதன் ஊடாகவோ இந்த பொருட்கள் அடங்கிய பொதியை வீட்டிற்கே கொண்டு வர முடியும் என அவர் கூறுகின்றார்.
சம்பா அரசி 10 கிலோகிராம், சிவப்பு சீனி 2 கிலோகிராம், நுல்டிரிஸ் ஒரு பக்கட், தேயிலை தூள் 100 கிராம், நெத்தலி 250 கிராம், சவட்காரம் 2, பப்படம் ஒரு பக்கட் ஆகியன இந்த பொதியில் உள்ளடங்குகின்றன.
இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்து :-
”இந்த பொருட்களை சந்தையில் 2,751 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும். நாங்கள் சதொச ஊடாக அந்த பொருட்களை 1,998 ரூபாவிற்கு வழங்குகின்றோம். இந்த பொருட்களை நாங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகின்றோம். சதொசவில் பொருட்கள் இல்லை என்ற பேச்சு இனி கிடையாது”
Post a Comment