புகையிரதத்தில் மோதி தாய், தந்தை, மகன் பலி

ஹட்டன் ரோசல்ல பகுதியில் புகையிரதத்தில் மோதுண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து ரோசல்ல புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிகே புகையிரதத்தில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரத பாதையை கடக்க முயன்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.