பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு - புதிய விலை விபரம் இதோ

பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால்மா ஆயிரத்து 345 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 480 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால்மா 540 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.