முதலாவது ஒமிக்ரோன் உயிரிழப்பு பதிவானது

கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வு காரணமாக முதலாவது உயிரிழப்பு பிரித்தானியாவில் இன்று (13) பதிவாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான 405 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்ஹ பிரித்தானியாவில் ஒமிக்ரோன் பரவும் அபாயம் எழுந்துள்ளதாக அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொவிட் தடுப்பூசிகளின் இரண்டு மருந்தளவுகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும், ஒமிக்ரோன் தொற்றினால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், இயலுமான விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.