பால் தேநீர் விற்பனை குறித்து வெளியான அறிவிப்பு - சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானம்.

பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (30) முதல் பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 80 ரூபாவுக்கும் அதிகமாக அதிகரிக்கப்படவுள்ளதால், பால் தேநீரை விற்பனை செய்வதிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளாா்.

பால் மாவின் விலை அதிகரித்துள்ள இவ்வேளையில் மீண்டும் ஒரு கப் பால் தேநீரின் விலையை அதிகரித்தால் அதனை நுகர்வோர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.

இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ பால் மா பாக்கெட்டின் விலையை 150 ரூபாவாலும் 400 கிராம் பாக்கெட்டின் விலையை 60 ரூபாவாலும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 400 கிராம் பொதி ஒன்றின் புதிய விலை ரூபா 540 ஆகவும், 1 கிலோ பால் மா பாக்கெட் ஒன்றின் புதிய விலை 1345 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடப்பிடத்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.