மின்சார பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி..! இன்று முதல்...

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மின் பிறப்பாக்கிகளில் இருந்தும் தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனூடாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவோல்ட் மின் இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 03 ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது.

எவ்வாறாயினும், சுமார் 6 மணித்தியாலங்களுக்குப் பின்னர் மின் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக அன்றிரவு வரை நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும், பின்னர் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்கு கொண்டு வரப்பட்டு, அனைத்து துணை மின்நிலையங்களும் மின் விநியோகத்தில் இருந்த போதிலும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயற்படாமல் இருந்தது.

பின்னர் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து 300 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் சேர்ந்துக் கொள்ளப்பட்டது.

மீதமுள்ள 600 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க இன்னும் சில நாட்கள் ஆகும் என மின்சார சபை தெரிவித்திருந்த நிலையில் நாட்டில் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.