மின்சார சபை ஊழியர்களின் திடீர் தீர்மானம்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் நாளை (14) சுகயீன விடுமுறை போராட்டத்துக்குத் தயாராகியுள்ளனர்.

நாளைய தினம் எதிர்ப்பு பேரணியொன்றும் நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நிர்வாகத்தின் சட்டவிரோதம் மற்றும் அதன் ஊழல், தன்னிச்சையான நடவடிக்கைகளினால் இலங்கை மின்சார சபை மேலும்  பாதாளத்தில் செல்வதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஊழியர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் தாம் முன்வைத்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதே நாளைய தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.