மத்திய மாகாணத்தில் தாண்டவமாடும் ‘டெங்கு’; சுகாதார பிரிவு விடுத்துள்ள வேண்டுகோள்.

மத்திய மாகாண மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கடந்த 11 மாதங்களில் 1048 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் 217 தொற்றாளர்களும் கண்டி மாவட்டத்தில் 779 தொற்றாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 52 தொற்றாளர்களுமாக, கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய 03 மாவட்டங்களிலும் மொத்தம் 1048 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

2020 ஆண்டு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதும் 2021 ஆண்டு தொற்றாளர்களின் எண்ணிக்கை மத்திய மாகாணத்தில் குறைந்தளவே காணப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வருகின்ற சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாக இம்மாவட்டத்தில் எதிர் காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென மத்திய மாகாண சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.