தனியார் பல்கலைகளுக்கு பணம் செலுத்தி பட்டங்கள் பெறுவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து.

அரசுத் துறைக்கு வெளியே நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்களில், மாணவர்கள் தங்கள் கல்விக்குப் பணம் செலுத்துவதால், அந்த நிறுவனங்கள் பட்டங்களை விற்கின்றன என்று அர்த்தமல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுத்துறைக்கு வெளியே பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சோகமானது மட்டுமல்ல, அது குற்றமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம், இலங்கையின் தனித்துவமான ஒரு நிறுவனமாகும்.

ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தில் உள்ள அதிகாரிகளுக்கான மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட போதிலும், தற்போது அது பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படைப் பணியாளர்களுக்கான மூன்றாம் நிலைக் கல்விக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

தற்போது ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கையின் சிறந்த மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகப் புகழ் பெற்றுள்ளதோடு, மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் மிகவும் திறமையான பட்டதாரிகளை உருவாக்குகிறது.

இன்றும் கூட, சில குழுக்களால் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு நன்மைகளை வழங்கியுள்ள வேலைத்திட்டத்தைத் தடுப்பதே, இந்தக் குழுக்களின் தேவையாக இருக்கின்றது.

பல தசாப்தங்களாக இலங்கையின் கல்வி முறைமையைப் பின் தள்ளும் இந்த அணுகுமுறை எனக்குப் புரியவில்லை.

நமது நாட்டின் கல்வி முறைமையானது, இன்றைய உலகின் தேவைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பது இரகசியமல்ல.

பொதுவாக, இலங்கையில் வழங்கப்படும் கல்விக்கும், 21ஆம் நூற்றாண்டில் நமது நாடு வளர்ச்சியடையத் தேவையானவற்றுக்கும் இடையே பொருந்தாத தன்மை உள்ளது.<

இதனால்தான் கல்விச் சீர்திருத்தங்கள், குறிப்பாக நமது மூன்றாம் நிலைக் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;.

குறைந்தபட்சம், கணினிகளின் மூலம் பணிபுரிவதற்கான சில அனுபவங்களைப் பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

விமர்சன சிந்தனை, தொழில்முனைவு மற்றும் ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட இன்றைய உலகின் வெற்றிக்குத் தேவையான ஏனைய திறன்களையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இவற்றில் பல சீர்திருத்தங்கள் ஏற்கனவே பல்கலைக்கழகங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு இன்னும் பல மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன
.
இந்தச் சீர்திருத்தங்கள்மூலம், எமது பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு உற்பத்தித் திறன் கொண்ட குடிமக்களாக இருப்பதற்குத் தேவையான திறன்கள் மற்றும் திறமைகளை அவர்களுக்கு அளிக்கும் என்று தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.