ஒமிக்ரோனை அடுத்து புதிதாக அச்சுறுத்தும் ‘டெல்மிக்ரோன்’ - வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்!

ஒமிக்ரொன் கொரோனா மாறுபாட்டில் இருந்து தற்போது டெல்மிக்ரொன் எனும் புதிய மாறுபாடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ஒமிக்ரொனின் புதிய பிறழ்வாக டெல்மிக்ரொன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏனைய மாறுபாடுகளின் கொரோனா அறிகுறிகளுக்கும், டெல்மிக்ரொன் பிறழ்வின் கொரோனா அறிகுறிகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் எதுவும் கிடையாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், டெல்ட்டா மாறுபாட்டை போல ஒமிக்ரொன் அல்லது டெல்மிக்ரொன் மாறுபாடுகள் இந்தியாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவாகக் காணப்படுவதாக அந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.