கடினமான தீர்மானங்களை நோக்கி நகரும் அரசங்கம்!

எதிர்காலத்தில் சில கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டி ஏற்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டுக்கு டொலர் வருமானத்தில் பாரியளவு இழப்பு ஏற்பட்டதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை எனவும், இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் வாங்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு பொருளாதார ரீதியாக மிகவும் கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.