எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் ரயில்களின் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
15 முதல் 20 சதவீதம் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரியுள்ள போதிலும், பஸ் கட்டணங்களை தற்போதைய சூழ்நிலையில் அதிகரிக்க முடியாது என அவர் கூறுகின்றார்.
பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், பஸ் கட்டணத்தை சடுதியாக அதிகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பஸ்களுக்காக விசேட சலுகைகளை வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கூறினார்.
Post a Comment