ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஒத்தி வைப்புக்கு இணங்க பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

2022 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 09 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.